Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு?…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால், கொரோனா பரவலை தடுக்க சென்னையில் வருகின்ற 19ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் 30 ஆம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு என்ற செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியது. இந்த தகவல் உண்மையில்லை என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இந்த தகவலை மக்கள் பகிர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |