நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பற்றிய விவரங்களை 5.30 மணி அளவில் மருத்துவர்கள் தெரிவிக்க உள்ளனர்.