Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா… அதிர்ச்சியில் சக ஊழியர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் மத்திய சிறையில் கொரோனா பரிசோதனையின் போது போலீஸ் சுப்பிரண்டுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்  தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மத்திய சிறையில் தமிழ்ச்செல்வன் என்பவர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ்செல்வனுக்கு கொரோனா பரிசோதனை செய்த போது சோதனையின் முடிவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்ச்செல்வன் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து அவருடன் இருந்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுக்கும் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |