Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் …! மாநில சுகாதார அமைச்சர்களுடன் … நாளை ஹர்ஷ்வர்தன் ஆலோசனை …!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுடன் , நாளை மத்திய சுகாதார அமைச்சரான  ஹர்ஷ் வர்தன்  ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின்  2ம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா ,டெல்லி போன்ற மாநிலங்களில், 2ம் அலை  வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தற்போது  ஒருநாள் தொற்றின் எண்ணிக்கை, 2 லட்சத்திற்கு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான ஹர்ஷவர்த்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தற்போது இந்தியாவில் கொரோனா  வைரஸின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. எனவே தொற்று பாதிப்பு அதிகமுள்ள ,மாநிலங்களின் சுகாதாரதுறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து வருகின்ற 19ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள  எய்ம்ஸ்  நிர்வாகத்தினருடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் ,அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றிக்கு  பயன்படுத்தப்படும் ,ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்த படவேண்டும் ,என்று அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், அதுமட்டுமல்லாது மருந்துகளை அனுமதி இல்லாமல் ,விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |