நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் நேற்று சித்திரை மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் நேற்று சித்திரை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும், ஆறுமுகக் கடவுளுக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதன் பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள தெய்வானை, வள்ளி, சுப்ரமணிய சுவாமிக்கு பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.