மே 6ஆம் தேதி மு க ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் மே 6ஆம் தேதி முக முக ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
தங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மு க ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் முக ஸ்டாலின் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது. இதையடுத்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் மு க ஸ்டாலின் மே 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.