Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனீ அரசு சட்டக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த OPS…!!!

தேனீ மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த கல்வி ஆண்டில் சட்ட கல்லூரி தொடங்க தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் வீரபாண்டியை அடுத்துள்ள சந்திரகுப்த மவுரியர் பள்ளியில் தற்காலிகமாக சட்டக் கல்லூரி வகுப்புகள் நடந்து வருகிறது. நிரந்தரமான சட்ட கல்லூரி கட்டிடம் அமைக்கப்பட்ட பிறகு மாற்றம் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சந்திரகுப்த மவுரியர் பள்ளியில் உள்ள தற்காலிக சட்டக் கல்லூரிக்கான அனைத்து வசதிகளையும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் தேனி மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு  செய்யப்பட்ட நிரந்தர சட்டக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜே.கே. ஜக்கையன், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் பலர் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உடன் இருந்தனர்.

Categories

Tech |