திண்டுக்கல் காவல்துறை அதிகாரி போடி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சரக டி.ஐ.ஜியான முத்துசாமி தேனி மாவட்டம் போடியிலிருக்கும் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் காவல்துறையினரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அதாவது காவல்துறையினர் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம், கையுறை, சானிடைசர் போன்றவைகளை கண்டிப்பாக பயன்படுத்த அறிவுரை கூறினார்.
மேலும் அவர் கொரோனா பரவலில்லிருந்து தங்களது குடும்பத்தினரையும், தன்னையும், பொதுமக்களையும் காவல்துறையினர் பாதுகாக்க வேண்டும் என்றுள்ளார். இதில் போடி காவல் நிலையத்தின் சில முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.