வறுமையால் வாடிய பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் பாபு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இவர் பழங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அந்த வியாபாரத்தில் குடும்பத்தை பராமரிப்பதற்கு போதுமான அளவு ஊதியம் கிடைக்காததால் பாபுவின் குடும்பம் கடந்த சில நாட்களாகவே வறுமையில் வாடியது. இந்நிலையில் மனமுடைந்த பாபு விஷம் குடித்து தற்கொலை செய்து உள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மயங்கிய நிலையிருந்த பாபுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபுவிற்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.