மீன்பிடிக்கச் சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகன் சதீஷ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தன் நண்பர்களான ஜீவா, சதீஷ்குமார், அஜய்குமார் ஆகியோருடன் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்த சதீஷ் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனைதொடர்ந்து சதீஷ் நண்பர்கள் ஊர் மக்களை உதவிக்கு அழைத்தனர். ஆனாலும் அவர்களால் சதீஷை காப்பாற்ற இயலவில்லை.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆற்றுக்கு விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பிறகு சதீஷின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சதிஷின் உடலை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.