நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CISCE 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CISCE நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேர்வு குறித்து ஜூன் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 10 12ம் வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து CISCE தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.