Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 35 ஆயிரத்து 136″…. அதிகரிக்கும் கொரோனா…. தொற்றினால் ஏற்படும் விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.

உலகெங்கிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது இரண்டு நாட்களில் 407 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதனையடுத்து சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  35 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |