Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீரின் மேற்ப்பரப்பில் நுரை பொங்கி வழியும் நொய்யல் ஆறு..!!

கோவை ஆற்றுப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின்  நீரின் மேற்ப்பரப்பில் நுரை பொங்கி வழிகின்றது.

 

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் கோவை  ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஆத்துப்பாலம் அடுத்த காலவாய் நொய்யல் ஆற்று தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. ஆனால் தண்ணீரில் சாய கழிவு மற்றும் கழிவுநீர் கலந்து வருவதால் நீரின் மேற்பரப்பில் நீண்ட தூரம் நுரை தேங்கி காணப்படுகிறது.

Related image

 

இந்நிலையில் இதனை நம்பியிருந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் நுரை ஏற்படுவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிடம் புகார் அளித்தனர்.

Categories

Tech |