நாமக்கல் மாவட்டத்தில் கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுச்சத்திரம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவதாக தொண்டாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி உதயகுமார் குத்தகைக்கு எடுத்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் விஜயலட்சுமி தற்கொலைக்கு காரணம் என்ன என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்