ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து செய்யப்பட்டது மாபெரும் ஜனநாயகப் படுகொலை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்து வந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ பிரிவு இரத்து செய்து காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் என்ற யூனியன் பிரதேசம் என்று மாற்றியது. இதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் காஷ்மீரின் சிறப்பு சட்டத்தை இரத்து செய்து இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்ததற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இது ஒரு மாபெரும் ஜனநாயகப் படுகொலை. இந்த நிலை தமிழகத்திற்கும் ஏற்பட வெகு காலமாகாது என்பதை எச்சரிக்கையாக தமிழக மக்கள் முன் வைக்கிறோம்”. என்று தெரிவித்துள்ளார்.