கனடாவில் சாலையின் ஓரமாக சென்ற முதியவர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் ரொறன்ரோவின் நார்த்யார்க் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது லாரி மோதியது. அவர் சாலையின் கட்டுமான தளத்தில் நடந்து சென்ற போது சாலையில் அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முதியவரின் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே லாரி ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.