மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் என்ஜீன்கள் மற்றும் வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 14-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி இழுவைப்படகு மற்றும் விசைப்படகு, இழுவை வலை மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க வழக்கம்போல் அரசு தடை விதித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சந்திரபாடி, தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சின்னூர்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை, தாழம்பேட்டை, வெள்ளக்கோவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுற்றுவட்டார பகுதி மீனவர்கள் தங்களுடைய 500-க்கும் மேற்பட்ட விசைப் படகு மற்றும் இழுவை படகுகளை பராமரிப்பு பணி செய்ய காரைக்கால், நாகப்பட்டினம், ஜெகதாபட்டினம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.