மத்திய பிரதேசத்தில் கரப்பான் பூச்சியால் ஒரு தம்பதி விவாகரத்து செய்யப்போகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அன்றிலிருந்து தற்போது வரை, அவர் தொடர்ந்து ஒவ்வொரு வீடாக மாறி வருகிறார். ஏனெனில் அவரது மனைவிக்கு கரப்பான் பூச்சி என்றால் பயமாம்.
இதனால் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 18 வீடுகள் மாறியிருக்கிறார்கள். அதாவது இவரின் மனைவி கரப்பான் பூச்சியை பார்த்தவுடன் அலறி விடுவாராம். உடனே இந்த வீடு வேண்டாம் வேறு வீடு பார்க்கலாம் என்று கூறி விடுவாராம். இதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளான கணவர் தன் மனைவியின் இந்த மன நிலையை சரிசெய்ய மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்துள்ளார்.
ஆனால் அவரின் முடிவுக்கு ஏற்ப மனைவி சரியான மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் கடும் விரக்தி அடைந்தவர், மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.