விவேக் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்ய நடிகர் விவேக்கிற்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்களின் அச்சம் நீங்குவதற்காக அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் விவேக். அவரின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணமல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பெரும் தொட்டு காலத்தில் தேவையற்ற அச்சம் வதங்கி படுத்துவதை விடுத்து அரசுடன் ஒத்துழைப்பும் என வலியுறுத்தியுள்ளார்.