மதுரையில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும், இவரது மகனும் அதே பகுதியிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்றனர். இதற்கிடையே திருமங்கலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரான லட்சுமணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர்.
அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சீதா லட்சுமியின் பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அதனுள் 2 கிலோ மதிப்புடைய கஞ்சா இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு மட்டுமில்லாமல் அவரிடம் இருந்த 2 கிலோ மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய சீதாலட்சுமியின் மகனையும் தேடி வருகின்றனர்.