இஸ்ரேல் நாட்டில் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக மக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஞாயிறு முதல் திறந்தவெளியில் மக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் 300க்கும் குறைவானவர்களே அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்றும், எனினும் மூடிய அரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.