1990 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், பிற பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொலைதூர கல்வியில் 2001, 2002இல் பயின்ற மாணவர்களுக்கும் இறுதியாக மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி அரியர் பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து கொள்ளலாம். மேலும் இந்த வாய்ப்பை இறுதி வாய்ப்பு ஆகும் இதனை தவறவிட்டால் மாணவர்கள் மிக வருத்தப்பட நேரிடும். அதனால் இதனை தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டு அரியர் தேர்வுகளை முடித்து வெற்றி காணுங்கள்.