நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள நடிகர் விவேக் உடல் நிலையில் முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியவரும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணிக்கு காலமானார். இந்நிலையில் நடிகர் விவேக் உடல் விருக்கம்பக்கத்திலுள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.