மதுரையில் பெண் ஓய்வுபெற்ற இன்ஜினியரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட எல்.லீஸ் நகரில் ஓய்வுபெற்ற என்ஜினீயரான ஆதிஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அதில் பணம் வரவில்லை. அப்போது அருகிலிருந்த பெண் உதவி செய்வதாக கூறி அவரது கார்டை மாற்றி வேறு ஒரு கார்டை கொடுத்துள்ளார். இதனையடுத்து அவரது செல்போனிருக்கு 68,000 ரூபாயை ஏ.டி.எம் மூலம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உண்மை வெளிவந்தது. அதாவது ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டை மாற்றி கொடுத்த அந்தப் பெண்தான் பணத்தை திருடியுள்ளார் என்பதை கண்டறிந்தனர். மேலும் காவல்துறையினர் அவரை கண்டுபிடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.