பாகிஸ்தான் -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையே நடந்த ,கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் வெற்றியை கைப்பற்றியது .
பாகிஸ்தான் -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையே , நேற்று 4 வது டி20 போட்டி நடந்தது. இதற்கு முன் நடந்த மூன்று டி 20 போட்டிகளில், பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியிருந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்ய , தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கில் களமிறங்கியது.முதலில் மாலன் – மார்க்ரம் ஜோடி களமிறங்க மார்க்ரம் 11 ரன்னில் வெளியேறினார். அடுத்து வான் டர் டுசன்- மாலன் இருவரின் ஜோடி இணைந்து, 57 ரன்களை குவித்தது . 33 ரன்னில் மாலன் வெளியேற ,அதிரடி ஆட்டத்தை காட்டிய வான் டர் டுசன் ,அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியாக தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட் இழப்பிற்கு , 144 ரன்களை எடுத்தது. அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 145 ரன்கள் இலக்காக கொண்டு ஆடியது. தொடக்க வீரர்களாக ரிஸ்வான் -பாபர் அசாம் களமிறங்க, ரிஸ்வான் 2வது பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பகர் சமான்- பாபர் அசாம் இருவரும் இணைந்து ,அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் அசாம் 24 ரன்னில் வெளியேற , பகர் சமான் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் மொகமது நவாஸ் 25 ரன்களை குவிக்க, பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் அணி நடந்த டி20 போட்டிகளில்,3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது .