தேனியில் கருப்பு திராட்சையின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் ஆனந்தம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் வாழை, நெல்லிற்கு அடுத்தபடியாக திராட்சையை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனையடுத்து தேனியில் முக்கியமாக சுருளிப்பட்டி, உத்தமபாளையம், நாராயண தேவன் பட்டி உட்பட சில கிராமங்களில் 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் திராட்சையை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதனை சாகுபடி செய்து விவசாயிகள் திருச்சி கோவை உட்பட சில பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புக்கின்றனர். இதற்கிடையே கடந்த சில மாதத்திற்கு முன்பாக திராட்சையின் விலை கிலோவிற்கு 10 ரூபாயாக விற்பனையானது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அதனை வெட்டி வீசினர். ஆனால் தற்போது திராட்சையின் விளைச்சல் குறைவாக உள்ளதால் ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.