Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தர முடியுமா, முடியாதா..? மகனின் மூர்க்கத்தனமான செயல்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

விருதுநகரில் சொத்தை பிரித்து தர மறுத்தால் தந்தையை மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் 64 வயதான லட்சுமணன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியரார் பணிபுரிந்து தற்போது அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 33 வயதான வீரமணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். இதில் வீர மணிகண்டன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்து உள்ளார்.

இந்நிலையில் வீர மணிகண்டன் தனது தந்தையான லட்சுமணனிடம் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரமாறு கேட்டு தொந்தரவு செய்து உள்ளார். ஆனால் அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த வீரமணிகண்டன் தந்தை என்று கூட பார்க்காமல் லட்சுமணனை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயமடைந்த லட்சுமணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் வீரமணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |