Categories
மாநில செய்திகள்

சிரிக்க வைத்ததோடு சிந்திக்க வைத்தவர்…. முதல்வர் ஆழ்ந்த இரங்கல்….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார்.

அவரின் உடல் இல்லத்தில்  வைக்கப்பட்டுள்ளது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான பத்ம ஸ்ரீ  உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து அவரின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விவேக் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார். அதில், சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவுச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரை உலகில் எண்ணற்ற படங்களின் மூலம் விவேக் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர். கலை சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு. பிளாஸ்டிக் தடை மற்றும் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |