Categories
உலக செய்திகள்

தடுப்பூசி மட்டும் போதும் ….முகக்கவசம் இனி தேவை இல்லை…. இஸ்ரேலின் அதிரடி உத்தரவு….!!!

இஸ்ரேலில்  மக்கள் அனைவரும் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டு வருவதால் முகக்கவசம்  அணிவதை தவிர்த்து விடலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் கொரோனவைரஸ்  காரணமாக தற்போது அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் 70% மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். ஆகையால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாகவும் அதில் பலர்  தற்போது குணமடைந்திருப்பதாக கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில் இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு பெரிதும் உதவியாக முகக்கவசம் இருந்துள்ளது. ஆனால் தற்போது தொற்றின் அச்சுறுத்தல் குறைந்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எனினும் மூடிய அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கும் போது மட்டுமே முகக்கவசத்தை அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த அறிவிப்பை வரும் ஞாயிற்றுக்கிழமை முதலே நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இஸ்ரேலில் உள்ள அனைத்து மக்களும் ஊசி போட்டுக் கொள்வதை தீவிரப்படுத்த இருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |