ரஜினி சொன்ன வாழ்த்துக்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் நாயகனான வலம் வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இப்படத்தினை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். மேலும் எடில்ஸி, இஹான், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் ’99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதற்கு ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Dear @rajinikanth sir Thank you for your kind wishes #99Songs 🌹🌸🌷 https://t.co/nnpu5V7E3s
— A.R.Rahman (@arrahman) April 16, 2021