அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் காலமானார். அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று கூறியுள்ளார்.