அரசு பெண் ஊழியர் தனது மேலதிகாரியை துடைக்கும் கட்டையால் அடித்த சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடகிழக்கு சீனாவில் அரசாங்க பெண் அலுவலர் ஒருவர் தனது மேல் அதிகாரியால் பாலியல் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதனால் அந்த பெண் அதிகாரி வேதனை தாங்காமல் மேலதிகாரியை துடைப்பத்தால் அடித்துள்ளார். மேலும் அழுக்கு தண்ணீரையும் புத்தகங்களையும் அவர் மேல் வீசி அடித்துள்ளார்.
இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் பாலியல் துன்புறுத்தல் செய்த மேலதிகாரிக்கு வேலை பறிபோகியுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் கடந்த வாரம் போலீசில் புகார் அளித்த நிலையில் இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.