Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு சதவீதம் கூட உங்கள் அளவுக்கு நான் வரமுடியாது’… பாராட்டிய சமந்தா… பவித்ரா வெளியிட்ட திடீர் பதிவு…!!!

நடிகை சமந்தா குறித்து நடிகை பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பவித்ரா . இதையடுத்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய பவித்ரா வைல்ட் கார்ட் சுற்றில் கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் குக் வித் கோமாளி 2 இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பவித்ராவுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடிகை பவித்ரா தெறி படத்தில் மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா போலவே வேடமிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இதைப்பார்த்த ரசிகர்கள் பவித்ரா பார்ப்பதற்கு சமந்தா போலவே இருக்கிறார் என கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என பவித்ராவை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள பவித்ரா ‘சமந்தா மேடம் உங்களுக்கு கோடி முறை நன்றி செலுத்துகிறேன். ‘மித்ரா’ என்ற சின்னத்தை மீண்டும் உருவாக்க இந்த போட்டோ ஷூட் நடத்தினோம். நாங்கள் உங்களது மிகப்பெரிய ரசிகர்கள். ஒரு சதவீதம் கூட நான் உங்கள் அளவுக்கு வர முடியாது. அந்த ஐடி எனக்கு சொந்தமானது அல்ல. நன்றி மேடம்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |