பிரிட்டனில் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு நபர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தலின் பேரில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வரை நாட்டு மக்களில் சுமார் 8.9 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிக்கான 2 டோஸ்களும் சரியாக செலுத்தப்பட்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேல்ஸ் பகுதியில் வயதானவர்களில் கால் பங்கு நபர்களுக்கு, அதாவது 22.8% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் வடக்கு அயர்லாந்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 17.2% ஆக இருக்கிறது. ஸ்காட்லாந்தில் மொத்தமாக தடுப்பூசி செலுத்தியவர்கள் 15.5 %பேர்.
இதற்கிடையில் பிரிட்டன் மற்றும் ஸ்காட்லாந்து அரசு 40 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ஆனால் வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் சுகாதாரத்துறை 40வயதிற்கு அதிகமான நபர்கள் தாங்களாகவே தடுப்புச் செலுத்திக்கொள்ள முன்வருமாறு கேட்டுள்ளது.