Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் தீபக்…. எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா…?

பிரபல தொகுப்பாளரும், நடிகருமான தீபக் விஜய் டிவிக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பல தொகுப்பாளர்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் பிரபலமானவர் தான் தீபக். இவர் சன் டிவியில் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் ஜீ தமிழிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் தீபக் கடந்த சில வருடங்களாக விஜய் டிவி பக்கமே வரவில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் தீபக் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சீரியலில் நக்ஷத்திராவும் நடிக்க உள்ளார். தீபக்கின் இந்த சீரியலை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |