அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் காலமானார். அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் மறைவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். “அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில் மண்ணு” என கூறினார் விவேக். தனது நகைச்சுவையாலும், கோடிக்கணக்கில் மரங்களை நட்டும் விவேக் சமூகத்திற்கு நிறைய தந்திருக்கிறார். வாழ்க்கையை வாழ ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார் என்று கூறினார்.