குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இதில் ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா, மதுரை முத்து ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோடு ஒளிபரப்பானது. இதில் சிறப்பாக சமைத்த கனி முதலிடத்தை பிடித்து டைட்டிலை வென்றார்.
இந்நிலையில் கனி தனது ரசிகர்களுடன் லைவ்வில் உரையாடியுள்ளார் . அப்போது ரசிகர் ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உங்களுடைய பேவரைட் கோமாளி யார்? என்று கேட்டுள்ளார். இதற்கு கனி ‘நிச்சயமாக சுனிதா தான்’ என பதிலளித்துள்ளார். மேலும் அவர் ‘ஆரம்பத்திலிருந்தே அவர்தான் எனக்கு கோமாளியாக வந்தார் . இதையடுத்து எங்களுக்குள் எப்படி நட்பு மலர்ந்தது என்றே தெரியவில்லை. அவர் பைனலில் எனக்கு கோமாளியாக வந்ததில் மிகவும் மகிழ்ச்சி’ என கூறியுள்ளார்.