Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா குறைக்குணும் …போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் …தூத்துக்குடியில் பரபரப்பு …!!

விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி ஏரலில் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல்பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் ஒன்றிணைந்து ஏரல் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க செயலாளர் சுப்புதுரை தலைமை ஏற்று உள்ளார்.இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமையா, பொது செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசியுள்ளனர்.

இதனையடுத்து அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் வடக்கு மற்றும் தென்கால் நீர் பாசன பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கார், நெல் சாகுபடி செய்யவும்,பயிர்களுக்கு தேவைப்படும் உரங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்வதால் உரங்களின் விலையை குறைக்கவும், அரசு நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் பொன்ராஜ், கணபதி சமுத்திரம், கணிராஜ் ,ஆறுமுகமங்கலம், ஜெயராம், ராஜன் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த விவசாயி நிர்வாகிகள் போன்றோர்  பங்கேற்றனர்.

Categories

Tech |