திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு செல்லும் சாலையில் உகார்த்தே என்னும் நகர் உள்ளது. இங்கு தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கார் ஒன்று கொடைக்கானலில் இருந்து பெருமாள் மலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
ஒரு கட்டத்தில் கார் சுமார் 50 அடி பள்ளத்தில் சாலையோரம் கவிழ்ந்து ஒரு வீட்டின் மீது மோதி நின்றது. அதில் கார் டிரைவர் குமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் கார் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பாதையில் தடுப்புச்சுவர் அமைக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.