புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த வாலிபரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் செந்தில் என்பவர் விராலிமலையிலுள்ள கடையில் மது வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் செந்திலை தடுத்து நிறுத்தி மறைத்து வைத்ததிருந்த கத்தியால் செந்திலை குத்தி கொலை செய்துள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் கடையை பூட்டி விட்டு வெளியே வந்த போது அவர்கள் இருவரையும் மர்ம கும்பல் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.