நடிகை நயன்தாரா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது நடிகை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
This one @ Ad Shoot 🎥 pic.twitter.com/tLWo19pFhn
— Nayanthara✨ (@NayantharaU) April 16, 2021
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகை நயன்தாரா கேரள சேலையில் தலை நிறைய மல்லிகைபூவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமண கோலத்தில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘இது ஒரு விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்டது’ என பதிவு செய்துள்ளார்.