Categories
உலக செய்திகள்

குழந்தைகளின் பலி எண்ணிக்கை 2070…. விடாது துரத்தும் கொரோனா…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

பிரேசிலில் கொரோனா பாதிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரேசிலிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது என கூறிய நிலையில் இந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர் பாத்திமா கூறுகையில் இதுவரை கொரோனா பாதிப்பால் 1302 பச்சிளம் குழந்தைகள்  உயிரிழந்தனர் என்றும் ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொத்தமாக 2070 பேர் இறந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று முதியவர்களை மட்டும் தாக்கும் என நம்பி வந்த நிலையில் தற்போது பிரேசிலில் நடந்த பச்சிளம் குழந்தைகளின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் உலகில் கொரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் அதன் இறப்பு எண்ணிக்கை 361,000 எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |