நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விவேக் குறித்து தளபதி விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவு இல்லாத நிலையில் நேற்று சென்னை வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.45 மணிஅளவில் விவேக் காலமானார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும், கலைஞர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிகில் திரைப்பட நிகழ்ச்சி விழாவில் நடிகர் விவேக் குறித்து தளபதி விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
Sir we will always miss you 😭 #RIPVivekpic.twitter.com/UTps8yQC2N
— Vijay Fans Trends 🐐 (@VijayFansTrends) April 17, 2021
அதில் பேசிய விஜய் ‘யாராவது குழிபறிக்கும் வேலையை செய்தால் அவர் மீது கோபம் தானே வரும். ஆனால் இவர் குழிபறிக்கும் போது இவர் மீது மரியாதை வருகிறது . அவர் மரக்கன்று நடுவதை பற்றி தான் சொல்கிறேன் . இது ரொம்ப பெரிய விஷயம் . ஒரு நடிகனா சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் செயல்லையும் இறங்கிவிட்டார், செயல்படவும் வைத்துவிட்டார் சூப்பர் சார்’ என விவேக்கை பாராட்டி கூறுகிறார்.