Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மயானகரைக்கு போயிட்டு வந்தேன்…. கடைசி எனக்கே இந்த நிலைமையா..? மின்சாரம் தாக்கி பலியான வாலிபர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்திற்கு அமரர் ஊர்தி கொண்டு சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல ஒட்டங்காடு பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் டிரம் செட்டு மற்றும் அமரர் ஊர்தி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அறந்தாங்கி பகுதியிலுள்ள பட்டினகாட்டில் ஒருவர் இறந்து விட்டதால் அந்த இறுதி ஊர்வலத்திற்க்கு சக்திவேல் தனது அமரர் ஊர்தி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மயான கரைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து அங்கு சடங்குகள் எல்லாம் முடித்ததும் அமரர் ஊர்தி வண்டியில் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது மயானகரையிலுள்ள மின் கம்பி வண்டியின் மேல் உரசியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சக்திவேல் உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சக்திவேல் இறந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |