Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலினுள் கிடந்த பாம்பு குட்டி…. குடிச்சவருக்கு என்னாச்சு….? பரபரப்பில் அரியலூர்….!!

மது பாட்டிலினுள் பாம்பு குட்டி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சுரேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் இவர் மதுபான கடைக்கு சென்று மது பாட்டிலை வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து டம்ளரில் ஊற்றி மது அருந்தியுள்ளார். பின்னர் மீதமுள்ள மதுவை இரண்டாவதாக டம்ளரில் ஊற்றிக் கொண்டிருக்கும் போது பாட்டிலினுள் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து பாம்பைக் கண்ட உடனே அவருக்கு சிறிது மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் பயத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |