பிரபல நடிகர் சோனி சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் நெருக்கடியான சூழ்நிலை இருந்த போது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு மிகப்பெரிய அளவில் உதவியவர் சோனு சூட். மேலும் அத்தகைய தொழிலாளர்களுக்கு தனியாக வேலைவாய்ப்பு தளம் ஒன்றையும் ஆரம்பித்தார், இவற்றோடு இல்லாமல் கல்வி உதவி தொகை, ஸ்மார்ட்போன்கள், மொபைல் டவர் அமைப்பு போன்ற பல உதவிகளை செய்து வந்தார்.
கொரோனா தொற்றிரின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் பல முக்கிய பிரபலங்கள் இந்த தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா உறுதி மனநிலை அதைவிட உறுதியாக இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். இதனால் யாரும் கவலைப்பட வேண்டாம், நான் எப்போதும் உங்களுக்காக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.