நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால், அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனால் அமைச்சக ஊழியர்களுக்கும், துறை சார்ந்த அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு செய்திக்குறிப்பில் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்தக் குறிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது வழங்கல் துறை ஆகிய அமைச்சகங்கள் தங்களின் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலகத்துக்கு குறித்த நேரத்துக்கு வருவதிலிருந்து தளர்வு கொடுக்கப்படுகிறது.
அதேசமயம் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அதிகாரிகள் வசித்தால் அவர்கள் அலுவலகத்திற்கு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கொரோனா நோய் பரவல் காரணமாக அதிகாரிகள், அலுவலர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம். வேலை செய்யும் பணி நேரமானது காலை 9 மணி முதல் 5.30 மணி வரை, 9.30 மணி முதல் 6 மணி வரை, காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை என மூன்று விதமான நேரங்களில் தங்களின் பணிகளை செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மணி நேரத்தையே மத்திய அரசின் சுய ஆட்சி அமைப்புகளும், ஊடகப்பிரிவு, பொதுத்துறை நிறுவனங்களும் பின்பற்றி கொள்ளலாம். அதன்பின் செயலர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அதிகாரிகள் வீட்டில் இருந்தபடியே பணி புரியலாம். செயல் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகள் அலுவலகம் வருவதில் விலக்கு இல்லை. கொரோனா நோய்க்கட்டுப்பாடு பகுதியில் இருப்பவர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரக்கூடாது. அலுவலகங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
அலுவலகங்களில் குரூப்-பி மற்றும் சி-பிரிவு ஊழியர்கள் 50% மட்டும் வருமாறு மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரியும் மாறு மாற்றிக் கொள்ளலாம். அதன்பின் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு அவசர பணி இருந்தால் உடனடியாக அலுவலகம் வரவேண்டும். மேற்படி ஆலோசனை கூட்டங்களை காணொளி வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து வீட்டில் இருந்தபடியே பணி புரியலாம் என அனுமதி வழங்கியுள்ளது.