மதுரையில் மூதாட்டியிடம் நூதன முறையில் பேசி நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் ஜெமிலாதேவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அப்போது 2 அவரிடம் இங்கு அதிகமாக சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெறும். எனவே இவ்வாறு நீங்கள் கழுத்தினுள் நகையை அணிந்து செல்லாதீர்கள் என்று கூறினர். மேலும் அவர்கள் தேவியிடம் சாதுர்யமாக நகையை எங்களிடம் கொடுங்கள் காகிதத்தில் வைத்து மடித்து தருகிறோம் என்று கூறினர்.
அதன்பின் அவர் கழுத்தில் போட்டிருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை 2 பேரிடமும் கொடுத்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர்கள் காகிதத்தில் மடக்கி கொடுப்பது போல் நடித்து திருடி சென்றுள்ளார்கள். இதற்கிடையே அவர் வீட்டிற்கு சென்று தங்க நகையை பார்த்தபோது காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.