பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹெலன் மெக்ரோரி. இவருக்கு வயது 52. இவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஹாரிபாட்டர், ஸ்கைபால், குயின் உள்ளிட்ட பல்வேறு படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். கோல்டன் டெர்பி விருது, டெலிவிஷன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இவரின் மறைவுக்கு திரை உலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.