பிக்பாஸ் பிரபலம் சம்யுத்தா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை கடந்துள்ளது. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்ற சம்யுக்தா மற்றும் பாலாஜி ஆகியோர் இணைந்து நடனமாடி உள்ள வீடியோ காட்சியை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்தது. சம்யுக்தா தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.